ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் ஆபரேஷன் அனுமதி!
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஆந்திரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சையில் முறையான பயிற்சி பெற்ற முதுநிலை ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கால இந்திய மருத்துவ முறையின் அறிவையும், நவீன மருத்துவ அறிவியலையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ சேவைகளின் பரப்பளவு மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு மருத்துவ வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் வரவேற்பு தெரிவிக்கப்பட்டாலும், மறுபுறம் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து கவனம் தேவை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
