அய்யா வைகுண்டசாமி அவதார நாள்... மார்ச் 4ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் விழா, அய்யா வைகுண்டசாமியின் அவதார தினமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சாமிதோப்பில் வழிபடுவதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு வருகை தருவர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், உள்ளூர் மக்களும் கலந்துக் கொள்ள வசதியாக திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 15ம் தேதி முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும், அரசு கருவூலங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!