தொழிலாளர்களின் குரல் டாக்டர் பாபா ஆதவ் காலமானார்!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல சமூக மற்றும் தொழிலாளர் ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் (95) நேற்று காலமானார். நீண்ட காலமாக உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் என அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக அவர் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். தொழிலாளர் நலனையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர் பாபா ஆதவ். எளிய மக்களின் குரலாக அவர் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் உரிமைப் போராட்டங்களில் பாபா ஆதவ் வகித்த இடம் தனித்துவமானது என பலரும் நினைவு கூர்ந்துள்ளனர். அவரது இழப்பு சமூகத்துக்கு ஈடுகட்ட முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
