பாபா சித்திக் கொலை வழக்கு… முதல் முறையாக குற்றவாளிக்கு ஜாமீன்!
காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ்தீப் கராஜ் சிங்குக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் குற்றவாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி நீலா கோகலே தலைமையிலான அமர்வு, விசாரணை முடியும் வரை மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.

66 வயதான பாபா சித்திக், 2024 அக்டோபர் 12-ஆம் தேதி இரவு மும்பை பாந்திரா கிழக்கில் உள்ள தனது மகன் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 2024 நவம்பரில் கைது செய்யப்பட்ட 22 வயதான ஆகாஷ்தீப் கராஜ் சிங் முதல் குற்றவாளியாக உள்ளார். ஜாமீன் மனுவில் தன்னை தவறாக வழக்கில் சேர்த்ததாகவும், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கில் ஜனவரியில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார். மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
