20 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து குட்டியானை உயிரிழப்பு!

 
குட்டி யானை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா அருகே உள்ள ஜோஸ் கிரி பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஜோஸ் கிரி பகுதியைச் சேர்ந்த விவசாயி மகேஷ் (38) என்பவரது விளைநிலத்தில் 20 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. நேற்று காலை மகேஷ் தனது தோட்டத்தில் உள்ள மோட்டாரை இயக்கியபோது, குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அங்கு குட்டியானை ஒன்று சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கிணறு

தகவல் அறிந்த செருபுழா வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிரேன் உதவியுடன் குட்டியானையின் உடல் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவக் குழுவினர் குட்டியானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். தண்ணீர் குடிக்க வந்தபோது அல்லது கூட்டமாக வந்தபோது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. "யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் சோலார் வேலிகள் அல்லது அகழிகள் அமைத்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜோஸ் கிரி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!