பிரபல நடிகைக்கு வளைகாப்பு...கேப்ரியல்லா செல்லஸ்க்கு குவிந்த வாழ்த்துக்கள் !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூல பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் ஆனவர் கேப்ரியல்லா செல்லஸ். திரையுலகில் கருப்பான தேகத்துடன் இருந்தால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்தவர். நடிக்க திறமை மட்டும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதை சுந்தரி சீரியல் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார் கேப்ரியல்லா செல்லஸ்.
இவர் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியவர் கேப்ரியல்லா. அதேபோல் டிக் டாக்கில் இவர் போடும் வீடியோக்களும் ரசிகர்களை கவர்ந்ததால் கேப்ரியல்லாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் முதன்முறையாக நடித்த கேப்ரியல்லா ரஜினியுடன் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தார். சினிமாவில் பெரிய அளவில் சோபிக்க முடியாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய கேப்ரியல்லா, சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் 2021ல் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
சுந்தரி சீரியல் முடிந்த கையோடு நடிகை கேப்ரியல்லா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார் கேப்ரியல்லா. அதுமட்டுமின்றி தான் கர்ப்பமான தகவலையும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு விழாவில் அவருடன் சுந்தரி சீரியலில் பணிபுரிந்த பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கேப்ரியல்லாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் படுவைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!