பகீர் வீடியோ... பிரபல மார்கெட்டில் திடீர் தீ விபத்து…. மாடியில் இருந்து குதித்த 2 பேர் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோய்டா, செக்டர் 18 பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அட்டா மார்க்கெட்டில் இன்று ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி 10–15 நிமிடங்களாக தீ எரிந்துவருவதால் பலர் அந்த இடத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Please arrive quickly, there is a fire, people are trapped, the fire department has not yet arrived, it has been 10-15 minutes. Noida sector 18 market @Uppolice @noidapolice @ANI pic.twitter.com/CjZkAhXo5N
— Piyush Yadav 🇮🇳 (@yadavpiyush207) April 1, 2025
தீ விபத்து ஏற்பட்டதும், சிலர் பாதுகாப்பாக உள்ளே இருந்து வெளியேற முயற்சித்தனர். முடியாத நிலையில் கூரை ஏறி தப்ப முயன்றனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உயிர் தப்பிக்க 4வது மாடியில் இருந்து குதித்த 2 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவில் கரும்புகை வெளியேறிய காட்சிகள் வைரலாகி, மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
#WATCH | UP | Fire breaks out in a commercial building housing offices in Noida's Sector 18; Fire Dept and Police present
— ANI (@ANI) April 1, 2025
Joint CP Shiv Hari Meena says, "We got information about a fire incident in the Krishna Plaza building. Many people have been rescued from the building.… pic.twitter.com/hJMVKgVWtP
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தீயில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற முடிவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!