பயணிகள் கடும் அவதி... மோசமான வானிலை ... 350 விமானங்கள் தாமதம்!

தலைநகர் டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோசமான வானிலையால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை சுமார் 350 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் சாதமான சூழல் இல்லாததால் பல்வேறு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகக் கடுமையாக அவதியடைந்துள்ளனர். இருப்பினும் நிலைமை தற்போதும் கொஞ்சம் சீராகி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!