பகீர்!! பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஐடி ஊழியர் துடிதுடித்து பலி!!

 
பிரியங்கா

ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வருபவர் 22 வயது  பிரியங்கா.  இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று பிரியங்கா தனது அண்ணன் 23 வயது ரிஷிநாதனுடன்  இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டைக்கு  சென்று கொண்டிருந்தார்.ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகில் அவரது அண்ணன்  மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றார் .

விபத்து

அப்போது எதிர் திசையில் வந்த  மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் பலமாக  உரசியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பிரியங்கா நிலைதடுமாறி சாலை நடுவில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்காவின் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் பிரியங்கா  படுகாயம் அடைந்தார்.அவருடைய  அண்ணன் லேசான காயங்களுடன்  கீழே கிடந்தார். அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ்

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியங்காவையும், அவரது அண்ணணையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்   சிகிச்சை அளித்தும் பிரியங்கா இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறை  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் எதிரில் வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தையும்  காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க