பகீர்!! மூளையை உண்ணும் வைரசால் ஒருவர் பலி!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

 
மூளையை உண்ணும் அமீபா

அமெரிக்காவில்  தெற்கு புளோரிடா பகுதியில் வசித்து வருபவர் மூளையை சாப்பிடும் அமீபாவால் உயிரிழந்துள்ளார். இவர் பிப்ரவரி 20ம் தேதி சார்லோட் கவுண்டியில் உள்ள தண்ணீர் குழாயில் முகத்தை கழுவியுள்ளார். அப்போது மூக்கிற்குள்  அமீபா சென்றுவிட்டதாக  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் குறித்த மற்ற தகவல்களை  சுகாதாரத் துறை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் பிப்ரவரி இறுதியில் இந்த திடீர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.  அதன்பிறகு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமீபா

அதன்படி காய்ச்சி வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும் . நேரடியாக குழாய் தண்ணீரை குடிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தண்ணீரை  கொதிக்க வைப்பதால் பச்சைத் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் அழிந்து விடலாம். அதன் பிறகு, அதை ஆறவைத்து குடிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த ஆண்டில் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெக்லேரியா ஃபோலேரி அமீபா மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்படைய வைக்கிறது, மேலும் முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸை ஏற்படுத்துகிறது. இது மூளை திசுகளை சேதப்படுகிறது.  நன்னீர் சூழலில் காணப்படும் இந்த வகை அமீபாக்கள் மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிப்படைய செய்து விடுகின்றன. இதனால் இந்த வகை அமீபாக்கள்  மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படுகிறது.

அமீபா
இவை தண்ணீரில் வெளிப்பட்ட 1 முதல் 12 நாட்களுக்கு பிறகு தான்  நோய் அறிகுறிகள்  தென்படும். 18 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விடுவார். சாதாரண தலைவலியில் தொடங்கி கடுமையான முன் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விறைப்பு, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா  நிலையை அடைந்து விடும்.  ஆம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் ஆகியவை முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் சிகிச்சைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெக்லேரியா ஃபோலேரி எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால், நோயில் இருந்து தப்பிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web