பகீர்!! 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டிற்குள் முடங்கிய பெண்!!

 
முன்முன்

எலிக்கு பயந்து வீட்டை காலிசெய்தவர், மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் என பழமொழிகள் கிராமத்தில் வழக்கத்தில் உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்து வந்தனர். தற்போது உலகம் முழுவதுமே இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் தாய் ஒருவர் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். அவர் இது வரை வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை.  

முன்முன்

வேலைக்கு செல்லும் கணவரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அரியானாவில் குருகிராம் மாவட்டத்தில் உள்ள மாருதி கஞ்சி பகுதியில் வசிப்பவர் சுஜன் மஜி. இவர் ஒரு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 2020 ல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது  தனது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார். அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அத்துடன் தனது 10 வயது மகனையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.   வேலைக்கு சென்று விட்டு வந்ததால் கணவரையும் வீட்டிற்குள் விடவில்லை. அதிர்ச்சி அடைந்த சுஜன், தன் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்து தங்கி விட்டார். அங்கிருந்தபடி குடும்பத்தை கவனித்து வந்தார்.

போலீஸ்

அப்போது முதல் மனைவி மற்றும் மகனுடன் வீடியோ காலில் மட்டுமே பேசி வருகிறார். அவர்களுக்கு தேவையான காய்கறி உட்பட அனைத்து பொருட்களை வாங்கி வந்து, தனது வீட்டின் கதவருகே வைத்து விட்டு சென்று விடுவாராம். அதனை  சற்றுநேரம் கழித்து எடுத்து சமைத்து வந்துள்ளார். இப்படி 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளனர். கொரோனா  காலம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்ற போதும் வீட்டை விட்டு வெளியே வர மறுத்தார். பேசி பேசி தீர்வு காண முடியாததால் சுஜன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாரும் சுகாதாரத்துறையினரும் நேற்று சுஜன் வீட்டுக்குச் சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்து தாய் மற்றும் 10 வயது மகனை வெளியே அழைத்து வந்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அரியானா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web