பகீர்!! அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்!! அலறி துடித்த 11 குழந்தைகள்!!

 
ராட்டினம்

பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிந்து சுற்றுலா செல்ல பெற்றோர் தயாராகி வருகின்றனர். மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்கள், தீம் பார்க்குகள், கடற்கரை இல்லங்கள், ஸ்டார் ஹோட்டல்கள், பொருட்காட்சி, கண்காட்சிகள்  என சுற்றிப்பார்க்க இடங்கள் ஏராளம். குழந்தைகளும் இத்தனை நாள் அடைந்து கிடந்த மன அழுத்தத்தில் அதிகமாகவே ஆடும். ஆனால் பெற்றோர் குழந்தைகள் மேல் கவனம் கொள்ள வேண்டும்.

ராட்டினம்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பேருந்து நிலையம் அருகே கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் ராட்டினம் ஒன்று திடீரென அறுந்துவிழுந்தது. இந்த கோர விபத்தில் 11 முதல் 15 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர். வேகமாக  சுற்றிக்கொண்டிருந்த ராட்டினத்தின் கேபிள் திடீரென அறுந்து ராட்டினம் கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆம்புலன்ஸ்


இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஜேஎல்என் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நடந்ததும் ராட்டின ஆபரேட்டர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web