பகீர்.. மருமகள் முகத்துல ஆசிட்.. வாயில கொசு மருந்து.. பத்ரகாளியாக மாறிய மாமியார்.. கண்பார்வை இழந்த மருமகள்!

 
கிருத்திகா

மருமகளின் முகத்தில் மீது ஆசீட் வீசியும், மருமகளின் வாயில் கொசு மருந்து ஊற்றியும் குடும்பத் தகராறில் மருமகளைக் கொல்ல முயன்ற மாமியார், விருதாசலம் முழுவதையுமே அதிர செய்திருந்தார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ். இவருக்கும் கிருத்திகா (23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் கோவை, அவிநாசியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). முகேஷ்ராஜ், அவிநாசியில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது தாயாரும், மனைவியும், குழந்தைகளும் விருதாச்சலத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில், முகேஷ்ராஜுன் தாயாருக்கு, அவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.

Girlfriend-throws-acid-on-boyfriend

இந்நிலையில் கிருத்திகா நேற்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது, வீட்டு கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்த வந்த மாமியார் ஆண்டாள், உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகாவின் முகத்தின் மீதும் பிறப்பிலும் ஊற்றினார். மேலும், கொசு விரட்டி மருந்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலைச் செய்ய முயற்சி செய்தார். 

அப்போது கிருத்திகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கிருத்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது ஆசிட் ஊற்றப்பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததை கண்டறிந்தனர். 

women-arrest

இதையடுத்து கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web