திருடிய புடவைகளை அலறியடித்தபடி திரும்ப கொடுத்த கும்பல்... துணிக்கடைக்காரர் செய்த பலே காரியம்! வைரலாகும் வீடியோ!

 
புடவை

திருட்டு கும்பல் முன்பெல்லாம் இரவு நேரங்களில் தான் கைவரிசையை காட்டும். இப்போதெல்லாம் டிப்டாப்பாக உடையணிந்து கும்பலாக பட்டப்பகலில் திருடுவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் இல்லத்தரசிகள், இளம்பெண்கள், கோட் சூட் போட்ட ஆண்கள் என பெரிய இடத்து மக்கள் போல் வந்து திருடுவது தான் பேஷனே. அப்படி ஒரு சம்பவம் தெலங்கானாவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் மணிகொண்டா பகுதியில்  தேஜா சேரீஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதே போல் கடந்த வாரம் 5 பெண்கள், ஒரு ஆண் என  மொத்தம் 6 பேர்  கும்பலாக வாடிக்கையாளர்கள் போல கடைக்கு வந்தனர்.  ஊழியர்களை துணி எடுத்து தர சொல்லி கேட்பது போல போக்கு காட்டி, சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 புடவைகளை பதுக்கி திருடிச் சென்று விட்டனர். 15 நிமிடங்களுக்குள் சத்தமே இல்லாமல் இந்த திருட்டை செய்து விட்டு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு கடையை விட்டு வெளியேறினர். கடை உரிமையாளர் இந்த 6 பேரையும் நோட்டமிட்டதில் சந்தேகம் ஏற்பட்டது.  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான் உண்மை கண்டறியப்பட்டது.  அதிர்ச்சியில் உறைந்த  கடை உரிமையாளர்  சிசிடிவி ஃபுட்டேஜை காண்பித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த கும்பல் மீது ஏற்கனவே   சில புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

போலீஸ்
கடை உரிமையாளர் இந்த சிசிடிவி காட்சிகளை  இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வைரலாக்கினார். மற்ற கடை உரிமையாளர்கள் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த வீடியோ  திருட்டு கும்பலின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையில் கடை உரிமையாளருக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் எங்களை மன்னிச்சிடுங்க நாங்க எடுத்துட்டு போன சேலைகளை திருப்பி கொடுத்திடறோம்  என பெண் ஒருவர் பேசினார்.  

மேலும் அந்த வீடியோவை இன்ஸ்டாவிலிருந்து நீக்கச் சொல்லியும் கதறி அழுதார். எங்கள் பிள்ளைகள் இதை பார்த்தால் எங்கள் மானம் போயிடும். ப்ளீஸ் சார். ஆனால் வீடியோக்களை எடுக்கலன்னா தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அதே பெண் மீண்டும் தொலைபேசியில் அழைத்து புடவைகளை செக்யூரிட்டியிடம் கொடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.  புடவைகளை வைத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகியுள்ளனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் வரை புகாரை வாபஸ் பெற மாட்டேன் என கடை உரிமையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web