பகீர் சிசிடிவி ஃபுட்டேஜ்! ஓவர் ஸ்பீடில் போலீசார் மீது மோதிய கார்!! வாகன பரிசோதனையில் பரிதாபம்!!

 
காவலர்

காரில் ஏறிவிட்டால் பல நேரங்களில் கார் ஓட்டுநர்களுக்கு நிதானம் என்பதே கிடையாது. அதிலும் மது அருந்திவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தால் விமானத்தின் அவசரம்.  நிதானம் கிடையாது. வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டால் அடுத்த கணமே நினைத்த இடத்திற்கு சென்று விட வேண்டும் என அவசர கதியில் படு வேகமாக வாகனங்களை செலுத்துகின்றனர். இதனால் பயணம் செய்பவர்கள் மட்டுமல்ல சாலைகளை கடப்பவர்கள், எதிரில் வாகனங்களில் வருபவர்கள் , சில நேரங்களில் சாலை ஓரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரும் தப்ப முடியாது.


நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை, குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் எத்தனை விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தினாலும் கவனிப்பதே இல்லை. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவனைந்தபுரம் விளக்கில் மதுரை  திருநெல்வேலி தேசிய நெடுஞ் சாலையில்   காவல் துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.இந்த  சோதனை சாவடியில் இன்று காலை முதல் பாதுகாப்பிற்காக 32 வயதான  மாரீஸ்வரன் மற்றும் 39 வயதான வீரசிங்கம் உட்பட 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

ஆம்புலன்ஸ்

அப்போது திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் அதிவேகமாக காவலர்கள் மீது மோதியது. இதில் மாரீஸ்வரன் மற்றும் வீரசிங்கம் ஆகிய இரு காவலர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காவலர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வீரசிங்கம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மாரீஸ்வரன் சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.அதன்பிறகு சிசிடிவி புட்டேஜ் மூலம்  காரை ஓட்டி வந்த மூலக்கரைபட்டியில் வசித்து வரும் 50 வயதான  முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். முத்துக்குமார் அதிக அளவு மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web