பகீர்... நடுவானில் எரிபொருளை நிரப்பும் 30 அமெரிக்க விமானங்கள் ஐரோப்பா நோக்கி புறப்பாடு... ஈரானில் உச்சத்தை எட்டும் போர்ப்பதற்றம்!

 
விமானங்கள்

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்யா உத்தரவு பிறப்பித்துள்ளது.அதே நேரத்தில் நடுவானில் எரிபொருளை நிரப்பும் 30 அமெரிக்க விமானங்கள், சில மணி நேரங்களுக்கு முன்பு ஐரோப்பா நோக்கி புறப்பட்டிருக்கின்றன. இந்த செயல்கள் அடுத்த சில நாட்களில் ஈரான்-இஸ்ரேல் போர் உச்சத்தை தொடும் என்பதை தெளிவு படுத்தி காட்டுகிறது. 

அமெரிக்க விமானப்படையை சேர்ந்த KC-135 மற்றும் KC-46 ரக விமானங்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உதவி செய்து வருவதாக ஏற்கனவே ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அமெரிக்க போர் விமானங்களின் நிலவரம் ஈரானின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயத்தில எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. ஏனெனில், இஸ்ரேல் விமானங்கள் ஈரானை தாக்க, நடுவில் எரிபொருளை நிரப்ப வேண்டியதில்லை. F-15 விமானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரே மூச்சில் ஈரானுக்கு அருகில் சென்று தாக்கிவிட்டு திரும்பும். ஆனால், மற்ற விமானங்களுக்கு இந்த கெப்பாசிட்டி கிடையாது. F-16 விமானங்களுக்கு கண்டிப்பாக இந்த உதவி தேவை.

இந்த விமானங்களை நடுவழியில் இறக்கியும் எரிபொருளை நிரப்ப முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் மீதும் நாங்கள் போர் தொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால் நடுவழியில் விமானத்தை தரையிறக்க முடியாது. ஆகவேத்தான் நடுவானில் எரிபொருளை நிரப்பும் டேங்கர் விமானங்களை இஸ்ரேல் நாடியுள்ளது.

விமானம்

அமெரிக்காவின் நடவடிக்கையால் எழுந்துள்ள இன்னொரு சந்தேகம் என்னவெனில், அமெரிக்க படைகளே நேரடியாக ஈரானில் போரில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, போர் தொடங்கியபோது தங்கள் ராணுவ தளங்களில் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஈராக்கில் அமெரிக்காவின் ராணுவ தளம் இருக்கிறது. இந்த தளத்தின் மீது, இஸ்ரேல் விமானங்கள் வைத்து தாக்குதல் நடத்திவிட்டு, அதை ஈராக்தான் செய்தது என அமெரிக்கா கூறலாம். 

விமானம்

இதையெல்லாம் கனெக்ட் செய்து பார்த்துதான், ரஷ்யா தனது குடிமக்களை உடனடியாக இஸ்ரேலிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. எகிப்து வழியாக வெளியேற 24*7 என முழுநேர உதவி செய்யப்பட்டு இருப்பதாகவும் ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. இதே வேகத்தில் போர் தொடரும் பட்சத்தில் நிச்சயம் ஈரான் அணு ஆயுதங்களை நோக்கி நகரவும் வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் சாத்தியமானால் உலகம் முழுவதும் அணு ஆயுத போர் பரவும். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில் கூட இந்த போர் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது