மருத்துவமனையில் பகீர்... “மருத்துவர் என்ற பெயரில் 7 பேரை கொலை செய்த நபர்”!

 
மருத்துவமனை

 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் டாமோ மாவட்டத்தில் தனியார் மிஷனரி மருத்துவமனையில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜான் கெம்’ எனும் பிரபல பிரிட்டிஷ் இதய நிபுணராக தன்னை அடையாளப்படுத்திய நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்ற நபர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டு இதய அறுவை சிகிச்சைகள் செய்து வந்துள்ளார்.

மருத்துவர்

இவரால் ஒரே மாதத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது, போலி மருத்துவர் பயன்படுத்திய ஆவணங்கள் பிரிட்டனில் உள்ள உண்மையான மருத்துவரின் பெயரில் போலியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து டாமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் தீபக் திவாரி முதலில் புகார் அளித்ததன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையின் அனைத்து பதிவுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மருத்துவர்

மருத்துவமனையால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவியையும் பெற்றிருப்பது வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web