பகீர் வீடியோ.. நோயாளிகள் அதிர்ச்சி... மருத்துவமனையில் மருத்துவரை செருப்பால் அடித்த நர்ஸ்!

 
பகீர் வீடியோ.. நோயாளிகள் அதிர்ச்சி... மருத்துவமனையில்  மருத்துவரை செருப்பால் அடித்த நர்ஸ்!  

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில்  அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் நேற்று காலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின்  பகுதி நேர மருத்துவர் சந்திரபிரகாஷ். 

இவருக்கும்   ஆண் நர்ஸ் சுரேஷ் சவுத்ரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறி கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவம் மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து  மருத்துவர் பிரகாஷ் கூறியதாவது, “பணியாளர்களிடம் குழந்தை பணிகள் குறித்து அறிவுறுத்தியபோது அவர்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து நர்சிங் இன்சார்ஜிடம் புகார் கொடுக்கச் சென்றபோது நர்ஸ் சுரேஷ் ஒத்துழைக்காமல், கடும் வகையில் எதிர்த்தார்” எனக் கூறியுள்ளார்.  

சந்திரபிரகாஷ் மேலும்  “சுரேஷ் எனது மேல் செருப்பால் தாக்கி, பின்னர் இரும்பு தட்டால் அடித்தார்” எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில் மற்ற நர்சிங் ஊழியர்கள் மருத்துவரை கட்டுப்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நர்ஸ் சுரேஷ் தனது பதிலில், “மருத்துவர் தான் அதிகமாகக் கூச்சலிட்டார், தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார்” என கூறியுள்ளார் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த சம்பவத்தால்   மருத்துவமனை நிர்வாகத்திலும், பொது மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் உருவாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web