பகீர்... 17 வயது சிறுவனை நிர்வாணமாக்கிச் செருப்பால் அடித்து சித்ரவதை செய்த நண்பர்கள்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், மனிதநேயமற்ற முறையில் 17 வயது சிறுவன் ஒருவனை அவனது நண்பர்களே சித்திரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத் தகராறு காரணமாக அந்தச் சிறுவனை நிர்வாணமாக்கி, லத்தியால் சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவனது சொந்தச் செருப்பாலேயே அவனை அடிக்க வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர் அந்த 'சைக்கோ' நண்பர்கள்.
17-year-old youth stripped naked and beaten with a stick over a money dispute by three of his friends in Jabalpur#MPNews | #Jabalpur | #FreePressMP pic.twitter.com/HNPGMhuSyj
— Free Press Madhya Pradesh (@FreePressMP) March 25, 2026
இதில் கொடுமையின் உச்சமாக, அந்தச் சிறுவனின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு அவமானப்படுத்தியதோடு, அந்த முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் 'கெத்தாக' பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஜபல்பூர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கேசு, ராஜேஷ் மற்றும் ராகவ் ஆகிய மூன்று பேரையும் கம்பி எண்ண வைத்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும், திருடிய பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்பதும் விசாரணையில் அம்பலமானது. "சமூக வலைதளங்களில் ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோ பதிவிடுவது மன்னிக்க முடியாத குற்றம்; இவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்" எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
