பகீர்... வெள்ளி கொலுசுக்காக பெண் கால்களை கோடாரியால் துண்டித்து கொடூரக் கொலை…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டி ஒருவர் வெள்ளி கொலுசுக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி அணிந்திருந்த சுமார் ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள கனமான வெள்ளி கொலுசுகளை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலுசுகளை காலிலிருந்து கழற்ற முடியாததால், மனிதாபிமானமற்ற முறையில் மூதாட்டியின் கால்களை கோடாரியால் துண்டித்து எடுத்துள்ளனர். மேலும் அவர் சத்தமிடாமல் இருக்க கழுத்தையும் அறுத்து கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
