பகீர்... ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவனது மனைவிக்கு எச்.ஐ.வி வைரஸ் ஊசி செலுத்திய இளம்பெண்!

 
எயிட்ஸ் எச்.ஐ.வி

ஆந்திர மாநிலம் கர்னூலில், சினிமா பட பாணியில் திட்டமிட்டுப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றை ஏற்படுத்த முயன்ற கும்பல் சிக்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த வசுந்தரா (34), தனது முன்னாள் காதலர் வேறொரு பெண்ணை மணந்து கொண்டதை ஏற்க முடியாமல், அவர்களது மணவாழ்க்கையைச் சிதைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் செவிலியர் கோங்கே ஜோதி (40) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுடன் கைக்கோர்த்துள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் தேதி, தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் காதலரின் மனைவி வீடு திரும்பும் போது, அவர்கள் மீது சாலை விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

உல்லாசம் மனைவி காதலி கள்ளக்காதல் கொலை

விபத்துக்குள்ளான பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து ஆட்டோவில் ஏற்றிய வசுந்தரா மற்றும் அவரது கூட்டாளிகள், தற்காப்பு இல்லாத அந்த நேரத்தில் எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் அந்தப் பெண்ணின் உடலில் செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. 

வசுந்தரா ஒரு ஆய்வுப் பணிஎன்று பொய் கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ஐ.வி நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளைப் பெற்றுள்ளார். இதனை அவர் தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ரகசியமாகச் சேமித்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ரத்த மாதிரி மற்றும் ஊசி போடப்பட்ட அடையாளங்களை வைத்துப் போலீசார் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தினர். இறுதியில் வசுந்தரா உள்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எச்.ஐ.வி

மருத்துவ ரீதியாக, எச்.ஐ.வி வைரஸ் உடலில் செலுத்தப்பட்ட உடனேயே அது முழுமையாகப் பரவாது. இதற்காக 'PEP' (Post-Exposure Prophylaxis) எனப்படும் அவசர சிகிச்சை முறைகள் உள்ளன. அந்தப் பெண் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!