ஒரே நாளில் 463 பேருக்கு ஜாமீன்.... மதுபானத் தடை வழக்கில் புதிய சாதனை... !
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, மதுபானம் இல்லா மாநிலத்தை உருவாக்குவேன் என பெண் வாக்காளர்களுக்கு உறுதி அளித்தது. அதன் அடிப்படையில், 2016 ஏப்ரல் மாதம் மதுபான தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, உற்பத்தி மற்றும் விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட கைதிகள் தொடர்பான 508 வழக்குகள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ருத்ரா பிரகாஷ் மிஷ்ரா தலைமையிலான ஒற்றை அமர்வு, ஒரே நாளில் 463 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு முன் ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

மதுபான தடை சட்டம் அதிகாரிகளால் தவறாக அமல்படுத்தப்பட்டதே இத்தனை வழக்குகள் குவிய காரணம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், வழக்குகளை விரைவாக முடிக்க ஒத்துழைத்த அரசு வழக்கறிஞர்களுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
