பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் திடீர் ராஜிநாமா!
இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக கடந்த மாதம் வெடித்த ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Bulgarian President Rumen Radev announced on Monday that he will submit his resignation on Tuesday, paving the way for his eligible participation in the country's upcoming snap parliamentary elections.
— United News of India (@uniindianews) January 20, 2026
"Tomorrow, I will submit my resignation from the post of President of the… pic.twitter.com/sCraZpMcsJ
ஜனநாயகம் உருவான பிறகு, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஒரு அதிபர் விலகுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. அவரது ராஜிநாமா கடிதம் அரசியல் சாசன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிபரின் பதவியை துணை அதிபர் இலியானா யோடோவா தற்காலிகமாக ஏற்க உள்ளார்.

62 வயதான ரூமென் ராதேவ் முன்னாள் விமானப்படைத் தளபதி ஆவார். ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். புதிய அரசியல் கட்சி தொடங்கி வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
