பற்கள் பிடுங்கிய புகார்… பல்வீர் சிங் மனு... விசாரணை மார்ச் 23க்கு ஒத்திவைப்பு!

 
கைதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 2023ஆம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பல்வீர் சிங் மீது, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், பல்வீர் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு, குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்த குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டது. தற்போது ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பல்வீர் சிங், இந்த குற்றக் குறிப்பாணையை ரத்து செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு எதிராக விசாரணை நடத்திய அதிகாரியே குற்றக் குறிப்பாணை பிறப்பித்துள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கே உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் துறை ரீதியான நடவடிக்கை தனது பதவி உயர்வு உள்ளிட்ட பணி பலன்களை பாதிக்கும் என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!