புதிய பாம்பன் பாலத்தில் பறந்த ரயில்... இம்மாத இறுதிக்குள் திறப்பு!

 
பாம்பன் பாலம்

 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இனைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  பாம்பன் ரயில் பாலத்தில் 1914 பிப்ரவரி 24ம் தேதி முதல்  ரயில் போக்குவரத்து தொடங்கி  100 வருடங்களுக்கு மேலாக   சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய ரயில் பாலம்  கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  பழைய பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்துவதற்கு முன்னதாகவே மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய பாலத்தை கட்டுவது என முடிவு  செய்திருந்தது. இதற்காக  550 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணியை  பாம்பன் கடலில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு  2020-ம் ஆண்டு தொடங்கியது.

பாம்பன் பாலம்

இதற்கான  கட்டுமான பணிகள் தற்போது  நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. 4 வருடங்களாக நவீன வசதிகளுடன்  பாம்பன் கடலில் 333 காங்கீரட் அடித்தளங்கள் 101 தூண்கள் 99 இணைப்பு கர்டர்களுடன்  37 மீட்டர் உயரம் 77 மீட்டர் நீளத்தில்   2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடுவில் கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப செங்குத்து பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கப்பல் கடந்து செல்லும்போது செங்குத்து பாலம் லிஃப்ட் போன்று ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ உயரத்திற்கு மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதற்காக மையப்பகுதியில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு 700 டன் எடை உடைய செங்குத்து பாலம் பொருத்தி இந்த தூணின் மேல் பகுதியில் செங்குத்து பாலத்தின் கர்டரினை ஏற்றவும், இறக்கவும், வீல்கள் போன்ற இழுவை இயந்திரம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

கலாம் சேது பாலம்

கப்பல் பாலத்தை கடந்து  செல்லும்போது  நவீன கம்ப்யூட்டர் வசதிகளுடன் பாம்பன்  செங்குத்து தூக்கு பாலத்தை  3 நிமிடங்களில்   உயர்த்தவும் இரண்டு நிமிடத்தில்  இறக்கவும் முடியும்.  தற்போதைய நிலவரப்படி பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, ரயில்  முதன்மை அதிகாரி ஒப்புதலுக்காக  காத்திருக்கிறது. ரயில்வே முதன்மை அதிகாரி ஒப்புதல் வழங்கிய பின் இம்மாத இறுதிக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சோதனை ஓட்டமாக இன்று  ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.  ரயில் இயக்கப்படும் போது தண்டவாளத்தில் அதிர்வுகள் ஏற்படுகிறதா  என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!