இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை! பலத்த பாதுகாப்பு! பிற்பகல் வருகிறார் ஜனாதிபதி!

 
கன்னியாகுமரி

இன்று பிற்பகல் 12 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரிக்கு  வருகை தர உள்ளார். நேற்று கேரளாவில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திரெளபதி முர்மு, இன்று தனி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார். பின்னர், குமரியில் இருந்து கார் மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்கிறார்.  

கன்னியாகுமரி

அங்கிருந்து தனி படகு மூலமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார்.

திரௌபதி முர்மு

இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று முழுவதும் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குமரியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web