கண்ணாடி பாலத்திற்கு செல்லத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 2024 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த பாலம் திறப்புவிழா முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், கண்ணாடி இழப்பாலம் பராமரிப்பு பணிக்காக தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!