சிகிச்சையில் உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவரை கைது செய்ய தடை!!

 
டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவு

“சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மீது குற்றம் சாட்டும் போக்கு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் புகார் அளித்தால் மருத்துவர்கள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்படி   வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் அப்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

அறிக்கை
புகார் குறித்த முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்டி கொள்ள  வேண்டும்.
மூத்த அரசு மருத்துவரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்துக்களை வாக்குமூலமாக பெற வேண்டும்.  குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கை எடுக்கும்  முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.  சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் மருத்துவரை கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சைலேந்திரபாபு
மருத்துவர்கள் குறித்து வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக களஆய்வு செய்ய வேண்டும்.வழக்கு குறித்த முழுமையான விவரங்கள், ஆதாரங்கள். சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை இதன் அடிப்படையில்   விரைவு அறிக்கையை  காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க   வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web