வெள்ளப்பெருக்கு... குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கத் தடை!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று காலை சற்று குறைந்திருந்தாலும், இன்னமும் அதிக அளவிலேயே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவிப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது. விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்திற்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குற்றாலம்

அருவிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் அருவி அருகே நெருங்காதபடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகு மட்டுமே பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மெயின் அருவி பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது.  மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!