குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை...சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.
அருவிகளில் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரைகளில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அருவிக்கரைகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!