ஆன்லைனில் வாக்கி டாக்கி வாங்க தடை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
 ஆன்லைனில் வாக்கி டாக்கி வாங்க தடை...  அதிரடி வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியீடு!

இன்றைய அவசர யுகத்தில் எல்லாமே ஆன்லைன், டிஜிட்டல் மயமாகி விட்டது. வீட்டுக்கு தேவையான குண்டுசி முதல் காய்கறிகள், உணவுகள் வரை அனைத்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இந்நிலையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த  அறிவிப்பின் கீழ், இனி ஆன்லைனில் வாக்கி-டாக்கி போன்ற ரேடியோ சாதனங்களை சட்டவிரோதமாக வாங்குவது கடினமாகியுள்ளது. ETA (Equipment Type Approval), அதிர்வெண் தகவல் மற்றும் உரிமத் தகவல் இல்லாமல் விற்பனை செய்யப்படும் சாதனங்களை தடுக்க, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. 

 ஆன்லைனில் வாக்கி டாக்கி வாங்க தடை...  அதிரடி வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியீடு!
இந்த நடவடிக்கை, தொலைத்தொடர்பு துறை  மற்றும் உள்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயர்லெஸ் இயக்க உரிமங்களுக்கு இணங்காமல் விற்பனை செய்யப்படும் சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன . இந்திய தந்திச் சட்டம் 1885, வயர்லெஸ் தந்திச் சட்டம் 1933 மற்றும் 2018-இல் வெளியிடப்பட்ட குறுகிய தூர ரேடியோ அதிர்வெண் சாதன விதிகள் ஆகியவற்றின் படி, வாக்கி-டாக்கி போன்ற சாதனங்களுக்கு உரிய அதிர்வெண் அனுமதி மற்றும் உரிமம் தேவை.

ஆன்லைனில் விற்பனையில் ETA மற்றும் உரிமம் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ஐ மீறும் செயலாக கருதப்படுகிறது. இதனையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்கி-டாக்கி சாதனங்களையே மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி.

வாக்கி டாக்கி லெபனான்

மின்னணு வணிக தளங்கள், ETA மற்றும் உரிம தகவல்களுடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.இதற்கு முந்தைய கட்டத்தில், CCPA 13 முக்கிய ஆன்லைன் தளங்களில் 16,970 தயாரிப்புகளுக்கு எதிராக அறிவிப்புகளை அனுப்பி, நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தது.

CCPAவின் புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மின்னணு வணிக தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்தவொரு தவறான விற்பனையும் கண்டறியப்பட்டால் வழக்குகள் பதிவு செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் விரைவில் கிடைக்கும் வாக்கி-டாக்கி சாதனங்களை வாங்கும்போது உரிமம், ETA உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்  சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது