குழந்தைகளுக்கான சளி இருமல் மருந்துகளுக்கு தடை... !

 
இருமல்

 இந்தியாவில் சளி இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  4  வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்  மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளால் குழந்தைகளுக்கு அதிக   பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் இதனைக்  கருத்தில் கொண்டு இந்த மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.  அடங்கிய பல குளிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தடை விதித்துள்ளது. இது குறித்து இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஜெனரல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருமல் மருந்து

அதில்    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும்   குளோர்பெனிரமைன் மாலேட் ஐபி 2மிகி + ஃபைனிலெஃப்ரைன் எச்சிஎல் ஐபி 5மிகி டிராப்/எம்எல் ஆகியவற்றின் 'நிலையான மருந்து கலவை' உற்பத்தியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.  அதில்  " 4  வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு FDC பயன்படுத்தக் கூடாது" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவின் படி   “4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு FDC மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நிறுவனங்கள் லேபிள் மற்றும் பேக்கேஜிங்கில் இது குறித்த  எச்சரிக்கைகளைக் குறிப்பிட வேண்டும்" என   கூறப்பட்டுள்ளது.டிசம்பர் 2023 வரை, இந்தியாவில் மொத்தம் 14 FDC மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. 

மாத்திரை மருந்து

தடைசெய்யப்பட்ட FDCகளின் பட்டியல்:

 அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின்
போல்கோடின் + ப்ரோமெதாசின்
Chlopheniramine Maleate + Phenylephrine ஹைட்ரோகுளோரைடு + காஃபின்
டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு
Ambroxol ஹைட்ரோகுளோரைடு + Guaiphenesin + Levosalbutamol + Menthol
டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + குய்பெனெசின்
டிஃபென்ஹைட்ரமைன் ஹைட்ரோகுளோரைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + அம்மோனியம் குளோரைடு
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
Dextromethorphan Hydrobromide + Doxylamine Succinate + Phenylephrine Hydrochloride
போல்கோடின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குய்பெனெசின்
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + டாக்ஸிலமைன் சுசினேட் + குய்ஃபெனெசின்
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + குய்ஃபெனெசின்

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web