ரயிலில் எலக்ட்ரிக் கெட்டிலுக்கு தடை... மீறினால் 5 ஆண்டு சிறை... பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
ரயிலில் பயணம் செய்யும் போது மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் பாயிண்டுகளில் எலக்ட்ரிக் கெட்டி, ஹீட்டர், இம்மர்ஷன் ராடு போன்ற அதிக மின்சாரம் உறிஞ்சும் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என ரயில்வே பாதுகாப்புப் படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படியான சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் மின் வயரிங்கில் திடீர் உயர் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து, குறுகலவு போன்ற ஆபத்துகள் நேரிடும் அபாயம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள சார்ஜிங் சாக்கெட்டுகள் 110 வோல்ட் மட்டும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால் வாட்டர் கெட்டி, ஹீட்டர் போன்ற சாதனங்கள் 1000 முதல் 2000 வாட் வரை மின்சாரம் எடுத்துக்கொள்வதால் வயரிங் சூடாகி தீப்பற்றும் நிலை உருவாகிறது. சமீப மாதங்களில் பல ரயில்களில் புகை வருதல், தீப்பொறி பறத்தல் போன்ற சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து RPF தீவிர சோதனையை மேற்கொண்டு வருகிறது.

இந்த விதிமுறைகளை மீறி அதிக மின்சார சாதனங்களை பயன்படுத்தினால் உடனடியாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 167-ன் கீழ் இது குற்றமாகக் கருத 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெந்நீர் தேவைப்பட்டால் பான்ட்ரி காரை பயன்படுத்தவோ, வீட்டிலிருந்து ஃபிளாஸ்கில் கொண்டு வரவோ பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் மற்ற பயணிகளின் உயிர் பாதுகாப்பிற்கும் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என RPF வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
