தொட்டபெட்டா காட்சி முனை செல்ல தடை...சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

 
தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டம், உதகையில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானை நடமாடி வருகிறது.  சுற்றுலாப் பயணிகள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக  வனத்துறை அறிவித்துள்ளது.

தொட்டபெட்டா

உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவி வரும் நிலையில் விலங்குகள் உணவுத் தேடி குன்னூர், கோத்தகிரி  பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தொட்டபெட்டா செல்லும் சாலைகளில் உலவி வருகிறது.

நீலகிரி
இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை வனத்துக்குள் விரட்டப்பட்டது. இன்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக  தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக  வனத்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?