செம... பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல தடையில்லை... முதல்வர் அதிரடி ட்வீட்!

 
ஹிஜாப்

கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் பள்ளி,  கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்தன. இந்த விவகாரம்  இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.  இதனால்  கர்நாடகாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு,  பல கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிய தடையை விதித்தன. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வி அடைந்தது.


இதனையடுத்து   ஹிஜாப் தடை நீக்கப்படாமல் இருந்தது,  கர்நாடகாவில் மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில்  காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்று 2 வது முறையாக  சித்தராமையா   மீண்டும் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மைசூரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  முதல்வர் சித்தராமையா உரை நிகழ்த்தினார். இதில்  கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தடையானது விரைவில்  திரும்பப் பெறப்பட உள்ளது  .

 

ஹிஜாப்

இனி  அவரவர்  விருப்பம் போல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.   ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லலாம். ஆடை அணிவதும், உணவு உண்பதும் அவரவரின்  தனிப்பட்ட விருப்பம்.  ஒவ்வொருவரும்  தங்களுக்கு விருப்பமான உடைய அணியவும், உணவு உண்ணவும்   யாரும் தடை விதிக்க முடியாது எனப் பேசியுள்ளார். இத்துடன்   தனது ட்விட்டர் பக்கத்திலும் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில்  பிரதமர் மோடி மக்களை ஜாதி மற்றும் உடை அடிப்படையில் பிரித்து வைக்கிறார். இது சமுதாயத்தை உடைக்கும் வேலை என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web