சாலைகளில் கட்சிக் கொடிகள், கொடிமரங்கள் வைக்க தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாலைகளில் கொடிமரங்களையும், கட்சிக் கொடிகளையும் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வருவதையும் கருத்தில் கொள்ளாமல் மும்முனைகள், தெருமுக்குகள், நாற்சந்திப்புகள் என பல இடங்களில் பிரச்சார கூட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. பெரிய பெரிய அரசியல் தலைவர்களின் கூட்டங்களே ஆள் இல்லாமல் காலி நாற்காலிகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு தெருவுக்குள்ளும் ஸ்பீக்கர்களைக் கட்டி, வழிநெடுக சாலைகளின் இருபுறமும் கட்சிக் கொடிகளை நட்டு தங்கள் விசுவாசத்தை கட்சித் தலைவர்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் காட்டி வருகின்றனர்.
வரவிருக்கும் தேர்தலுக்கு இப்போது முதலே அரசியல் கட்சிகள், தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அடுத்தடுத்த நகர்வுகளை செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல பகுதிகளில் கட்சிக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி மக்களை திரட்டி வருகின்றனர். இந்த சமயங்களில் சாலை ஓரங்களில் கட்சிக்கொடிகள் பேனர்கள், பிளக்ஸ்கள், சீரியல் பல்புகள் என அந்த ஏரியாவை அதகளப்படுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் நீதிபதிகள் திட்டவட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!