அச்சச்சோ!! ரேப்பிட்டோ பைக் டாக்சிக்கு தடை!! அதிரடி உத்தரவு!!

 
ரேப்பிடோ


இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில்  கட்டண அடிப்படையில் வாடகைக்கு டாக்சி,பைக்குகள்  செயல்பட்டு வருகின்றன.  அந்த வகையில் மதுரையிலும் ரேப்பிட்டோ பைக் சேவை செயல்பட்டு வருகிறது.இதற்கு ஆட்டோ  ஓட்டுர்கள் இந்த பைக் சேவையால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.  கடந்த 6ம் தேதி ரேப்பிட்டோ பைக் ஓட்டும் வாகனங்களை ஆர்டிஓ அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்தனர். இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக மதுரை காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மதுரை

அதில் "Rapido Bike Taxi" என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல் Online Mobile App மூலம் பொதுமக்களிடம் www.rapido.bike என்ற Website மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு பைக் டாக்சிகளை இயக்கி வருகிறது. மோட்டார் வாகன சட்டங்கள்/விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000க்கும்  மேற்பட்ட 2 சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக்கி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxi கள் இயக்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின்  இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேப்பிடோ

 கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அறிவுறைப்படி சட்டப்படி அங்கிகாரம் பெறாத "Rapido Bike Taxi" நிறுவனத்திடம் Mobile App மூலம் வாடகைக்கு  2  சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை மீறுபவர்களுக்கு ரூ10000 அபராதம் விதிக்கப்படும். இதனை கண்டறிய மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது 2  சக்கர வாகனங்களை வாடகை Bike Taxi க்கு பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web