ஆட்டோ, பைக் மூலம் சரக்கு ஏற்றிச் செல்லத் தடை … தமிழகத்தில் திடீர் உத்தரவு

 
aauto aauto

தமிழ்நாடு மாநிலத்தில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வாகனங்களை இயக்கினால் சோதனையில் கண்டறியப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆட்டோ மற்றும் பைக் வாகனங்கள் மூலம் சரக்குகள் ஏற்றி செல்லப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராபிட்டோ (Rapido) மற்றும் போர்ட்டர் (Porter) செயலிகள் மூலம் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகனங்களாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து ஆய்வாளர்கள் திடீர் வாகன சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!