பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை.. தலிபான்கள் உத்தரவு!

 
தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்கள் கைப்பற்றிய அடுத்த நிமிடம் முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை தலிபான்கள் அரசு கொண்டு வந்தது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்தும் வருகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். இது தொடர்பாக தலிபான் ஆட்சியாளர்கள் பிறப்பித்த உத்தரவில், முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன்படுத்தக் கூடாது. மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்க கூடாது, என்று கூறியுள்ளது. இந்த தகவலை பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’ செய்தியாக வெளியிட்டுள்ளது.

தலிபான்கள்

தலிபான் ஆட்சியாளர்களின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிள்ளது. சர்வதேச அளவிலான சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பினர், சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் சமூக செயல்பாட்டாளர் ஷப்னம் நஷ்மியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தலிபான்கள்

அவர் கூறுகையில், முன்னதாக பெண்கள் கல்லூரி செல்ல, வீட்டை விட்டு வெளியில் செல்ல தலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்தனர். தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வருகின்றனர். குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதும் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதும் அடிப்படை உரிமை. தற்போது அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web