நள்ளிரவு முதல் தடைக்காலம்... மீன் வாங்க அலைமோதிய மக்கள்!

 
மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி மாவட்டம்  திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விலை அதிகரித்தாலும், மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக கடந்த வியாழன், வெள்ளி (ஏப். 10, 11) ஆகிய 2 நாள்கள் விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், ஆழ்கடலுக்குச் சென்றிருந்த திரேஸ்புரம் நாட்டுப் படகுகள் நேற்று கரைதிரும்பின. 

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

அவற்றில், மீன்கள் வரத்து குறைவாகக் காணப்பட்டதால், விலை உயா்ந்திருந்தது. சீலா கிலோ ரூ. 1,300, விளை, ஊளி, பாறை ஆகியவை ரூ. 500 - ரூ. 600 வரை, நண்டு ரூ. 500, வாளை ரூ. 300 என விற்பனையாகின. ஏற்றுமதி ரக மீன்களான பண்டாரி ரூ. 1,000 - ரூ.1,300, பூனைக்கண்ணி ரூ. 700, தம்பா ரூ. 500 என விற்பனையாகின.

மீன் கடை மார்க்கெட் அசைவம்

மீன் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமிருந்தது. விலை உயா்வையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா். வரத்து குறைவு என்றாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web