வங்கதேசத்தில் இன்று 10 லட்சம் பாதுகாப்பு படையுடன் வாக்குப்பதிவு !
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 18 மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பதற்றம் நிலவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
300 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் ரத்து செய்யப்பட்டதால் 299 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். 12.77 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் 8 லட்சம் பேர் தபால் வாக்கு மூலம் முதன்முறையாக பதிவு செய்துள்ளனர்.

இந்த தேர்தலுடன் ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ குறித்த மக்களவை வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. பிரதமருக்கு 10 ஆண்டுகள் காலவரையறை உள்ளிட்ட முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்கள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. 42,659 வாக்குச்சாவடிகளில் 24 ஆயிரம் இடங்கள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
