பகீர்... வங்கதேச புதிய நாடாளுமன்றத்தில் 43 எம்.பி.க்கள் மீது கொலை குற்றச்சாட்டு..!
வங்கதேச நாட்டில் நடைபெற்ற 13-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 297 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 43 பேரின் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் Tarique Rahman தலைமையிலான Bangladesh Nationalist Party பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் தாரிக் ரஹ்மான் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

வெற்றி பெற்ற கட்சியின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குற்றவழக்குகளில் சிக்கியுள்ளதாகவும், தீவிர வலதுசாரி Jamaat-e-Islami கட்சியிலும் அதேபோன்ற நிலை இருப்பதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொத்தம் 142 உறுப்பினர்கள் தற்போது வழக்குகளை எதிர்கொள்வதாகவும், 185 பேர் கடந்த காலங்களில் வழக்குகளில் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 95 பேர் கடந்த காலமும் தற்போதும் வழக்குகளை சந்தித்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

மேலும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை உயர் கல்வி பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 297 உறுப்பினர்களில் 8 பேர் முனைவர் பட்டம், 138 பேர் முதுகலைப் பட்டம், 93 பேர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
