மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு சித்தர் 86வது பிறந்தநாள் விழா!

 
மேல் மருவத்தூர்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு சித்தர் அவர்களின் 86வது பிறந்தநாள் விழா மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள பங்காரு சித்தரின் உருவ சிலைக்கும் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் இதில் பங்கேற்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு பங்காரு சித்தரின் உருவ சிலை வைக்கப்பட்ட வெள்ளி ரத தேர்த்திருவிழா நடைபெறும். 9.45 மணிக்கு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வருகை தருகிறார். அவருக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள், பக்தர்கள் சிறப்பு வரவேற்பு அளிக்கின்றனர். காலை 10.30 மணிக்கு திருப்பாதுகைகளுக்கும் சிலைக்கும் பாத பூஜை நடைபெறுகிறது.

மாலை 3.45 மணிக்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் ஆன்மிக ஜோதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகிக்கிறார். மாலை 4 மணிக்கு துணை தலைவர் ஸ்ரீதேவி பங்காரு கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்கிறார். பக்தர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!