ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை… வங்காளதேச அரசு அதிரடி உத்தரவு!

 
ஐபிஎல்

2026 ஐபிஎல் டி20 தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வீரர்கள் மின் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. ஆனால் வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 இந்து மதத்தினர் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து, ஐபிஎல் தொடரில் முஷ்தபிசுர் ரகுமான் பங்கேற்க எதிர்ப்பு எழுந்தது. பிசிசிஐ கோரிக்கையை தொடர்ந்து கொல்கத்தா அணி அவரை விடுவித்தது. இதனால் ஆத்திரமடைந்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கமாட்டோம் என அறிவித்தது.

மேலும், தங்கள் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில், வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் காலவரையற்ற தடை விதித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!