டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து வங்கதேசம் வெளியேற்றம் - ஸ்காட்லாந்து அணிக்கு ஜாக்பாட் வாய்ப்பு!

 
ஐசிசி கிரிக்கெட் டி20

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ICC), வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் (BCB) இடையே நீடித்து வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் தங்களது வீரர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூறி, இந்தியாவில் நடைபெற வேண்டிய தங்களது லீக் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் பிடிவாதம் பிடித்தது.

கிரிக்கெட்

இந்தியாவில் வீரர்களுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று சுயாதீன ஆய்வு அறிக்கைகள் மூலம் உறுதி செய்த ஐசிசி, கடைசி நேரத்தில் போட்டிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

24 மணி நேரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி விடுத்த கெடுவிற்கு வங்கதேசம் முறையான பதில் அளிக்காததால், தற்போது அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம்

வங்கதேசம் இடம்பெற்றிருந்த 'சி' பிரிவில் (Group C) அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. ஐசிசி தரவரிசையில் தகுதி பெறாத அணிகளில் முன்னிலையில் (14-வது இடம்) இருப்பதாலும், கடந்த கால உலகக்கோப்பைத் தொடர்களில் ஸ்காட்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும் அந்த அணிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!