தொடரும் பதற்றம்... வங்கதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் சுட்டுக் கொலை!

 
வங்கதேசம்

வங்காளதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் வெடித்த மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனா ஆட்சியை வீழ்த்தியது. பதவி விலகிய ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ம் தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அடுத்த மாதம் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் முக்கிய முகமாக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்தது. டிசம்பர் மத்தியில் இருந்து நடந்த தாக்குதல்களில் இந்துக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6 இந்துக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் அஜிஜுர் ரகுமான் முசாபீர் டாக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடரும் துப்பாக்கி தாக்குதல்களால் நாட்டில் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!