இந்திய தூதரக குடும்பங்கள் உடனே நாடு திரும்புங்க... வங்கதேச பதற்றத்தை அடுத்து மத்திய அரசு அவசர உத்தரவு!
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் இந்தியா – வங்கதேசம் உறவிலும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்து மதத்தினரை குறிவைத்து கொலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் பாதுகாப்பு கருதி, வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வங்கதேச தூதரகப் பணி “நான் ஃபேமிலி போஸ்ட்” ஆக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலால் பதற்றம் அதிகரிக்கும் என கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைவிட வங்கதேச நிலைமை அதிக ஆபத்தானதாக மத்திய அரசு கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
