மே மாசம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. உங்க பண தேவைகளை திட்டமிட்டுக்கோங்க!
ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும் நிலையில், மே மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சில மாநிலங்களில், உள்ளூர் திருவிழாக்களைப் பொறுத்து அந்த மாநிலங்களில் மட்டுமே அன்றைய தினம் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை துவங்கி விட்ட நிலையில், பலரும் மலைவாசஸ்தலங்களுக்கும், இயற்கை கொஞ்சும் இடங்களுக்கும் சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர்.
வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்து சென்றாலும் நம்ம ரேஞ்சுக்கு உள்ளூர் சுற்றுலா போனா கூட, கமிட்மெண்ட்ஸ் என்று ஆயிரங்களில் இருக்கும் வரவு செலவு கணக்குகளுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்வோம். இந்த டென்ஷன்ல வங்கி விடுமுறை நாட்களை மறந்துடாதீங்க.

மே மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மாநிலங்களுக்கு மாநிலம் உள்ளூர் விழாக்களைப் பொறுத்து மாறுபடும். நீங்க சுற்றுலா போகிற ஊர்ல என்னைக்கு வங்கி விடுமுறை என்பதைத் தெரிஞ்சு வெச்சுக்கோங்க. அவசரத்துக்கு போற இடத்துல ஏடிஎம்ல பணமில்லாம திண்டாடாதீங்க. நம்ம ஊரு மாதிரி தெருவுக்கு நாலு ஏடிஎம் இயந்திரங்கள் எல்லாம் பல மாநிலங்களில் கிடையாது.
மே மாதத்தில் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 1ம் தேதி - மே தினம், பொது விடுமுறை
மே 5ம் தேதி - புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
மே 7ம் தேதி - ஞாயிறு விடுமுறை
மே 9ம் தேதி - ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

மே 13ம் தேதி - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
மே 14ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
மே 16ம் தேதி - சிக்கிம் தினம்
மே 21ம் தேதி - ஞாயிறு விடுமுறை
மே 22ம் தேதி - மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
மே 24ம் தேதி - காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி, திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
மே 27ம் தேதி - நான்காவது சனிக்கிழமை விடுமுறை
மே 28ம் தேதி - ஞாயிறு விடுமுறை
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
