ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள்... வங்கிப்பணிகளை ப்ளான் பண்ணிக்கோங்க!

 
வங்கி விடுமுறை
 

 இன்று ஜூன் 1ம் தேதி மாதத்தின் முதல் நாளே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் துவங்குகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்றென்று விடுமுறை என செக் பண்ணிக்கோங்க.

பொதுவாகவே நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில்  ஒவ்வொரு மாதமும் வங்கி பணி மற்றும் விடுமுறை நாட்களை முந்தைய மாத இறுதியில் வெளியிட்டு விடுகின்றன. இதற்கேற்றபடி வங்கிப்பணிகளை திட்டமிட்டு கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

மே மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இதனையடுத்து  இப்போது ஜூன் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது .
ஜூன் 1-ஞாயிற்றுக்கிழமை 
ஜூன் 6 - வெள்ளிக்கிழமை- திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் பக்ரித் காரணமாக அன்று விடுமுறை இருக்கும்.
ஜூன் 7 சனிக்கிழமை அகர்தலா, ஐஸ்வால், பெலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா, ஹைதராபாத் - தெலுங்கானா, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர்  பகுதிகளில் பக்ரித்  விடுமுறை  

வங்கி விடுமுறை

ஜூன் 8 -ஞாயிற்றுக்கிழமை 
ஜூன் 11- புதன்கிழமை , சந்த் குரு கபீர் ஜெயந்தி காங்டாக் மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.
ஜூன் 14- 2வது சனிக்கிழமை
ஜூன் 15-ஞாயிற்றுக்கிழமை
ஜூன் -22 ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 27 வெள்ளிக்கிழமை புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் ரதயாத்திரை  
ஜூன் 28 -4வது சனிக்கிழமை
ஜூன் 29 ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 30  திங்கட்கிழமை  மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்.

வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும்  ஆன்லைன் வங்கி மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும் பெரும்பாலான வங்கி சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. எனவே, விடுமுறை நாட்களில் கூட வீட்டில் அமர்ந்தபடி பல வங்கி பணிகளை முடித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது