ரூ41000 சம்பளத்தில் வங்கிப் பணி!! உடனே விண்ணப்பியுங்க!!

 
எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  SBI சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ
மொத்த பணியிடங்கள்:1031
காலிப்பணியிட விவரம் :
சேனல் மேலாளர் உதவியாளர்  -  821 காலியிடங்கள் 
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் -172 
 துணை அதிகாரி -38 
ஆன்லைன் பதிவு தொடங்கிய தேதி : ஏப்ரல் 1, 2023.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 30, 2023.


கல்வித்தகுதி :
பதவிகளுக்கு ஏற்றார் போல தகுதி வரம்புகள் வேறுபடுவதால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 
தேர்வு செயல்முறை : நேர்முகத் தேர்வு
, தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுவார்கள். இதையடுத்து, வங்கியால் அமைக்கப்பட்ட ஷார்ட்லிஸ்டிங் கமிட்டி, வங்கியால் தீர்மானிக்கப்பட்டு  நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 


சேனல் மேலாளர் வசதியாளர் - ரூ . 36000
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் - ரூ. 41000
உதவி அதிகாரி - ரூ. 41000


எப்படி விண்ணப்பிக்கலாம்? 

வேலை வாய்ப்பு முகாம்
 எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ  இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின்  மூலம். தங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் போது  அசைன்மென்ட் விவரங்கள், அடையாளச் சான்று, வயதுச் சான்று, அனுபவ சான்று என அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதே போல் இவற்றின் உண்மை தன்மை நேர்காணிலில் பரிசீலிக்கப்படும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web